பேரன்பிற்கும் பெருமதிப்பிற்கும் உரிய நகரத்தார் பெருமக்கள் அனைவருக்கும் இந்த எளியவனின் வணக்கம்!
நமது நடப்புச் செய்திகளையும்,
நம் மனதிற்கிசைந்த கவிதைகளையும், பாடல்களையும், நல்ல கதைகளையும் உங்களுடன் பரிமாறிக் கொள்வதற்காக அடியவனின் சிறுமுயற்சிதான் இந்த வலைப்பூ!
எதை வேண்டுமானாலும் எழுதலாம் – அது சுவாரசியமாகவும் படிப்பவர்களின் மனதை நெகிழவைப்பதாகவும் இருக்கவேண்டும் – எழுத்திற்கு அடைப்படை அதுதான்.
அதை நன்கு புரிந்து கொண்டவன் என்ற முறையில் உங்களுக்காக எழுத விழைந்துள்ளேன்.
வாழ்த்தியருள வேண்டுகிறேன்
அன்புடன்
வீரப்பசெட்டி சுப்பிரமணியன்
